அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு நடத்தவும், கற்றல்- கற்பித்தல் பணிகள் தொய்வின்றி நடப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்.
அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி, முள்ளிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் நடத்தினார். அப்போது பள்ளியில் முன் தகவல் எதுவும் கொடுக்காமல் இடைநிலை ஆசிரியர் பி.பார்த்திபன், பல ஆண்டுகளாக பணிக்கு வராமல் இருந்ததை கண்டறிந்தார்.
இதனையடுத்து அவர் மீது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973 விதி எண் 20-ன் கீழ் பணி இடைநீக்கம் செய்து கல்வித் துறை உத்தரவிட்டது.
No comments:
Post a Comment