அரசுப் பள்ளிகளில் பணியாற்றும்
துணை முதல்வர், தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடிவு
பட்டியல் சேகரிப்பு
Read this also:
புதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பள்ளி முதல்வர் பணியிடங்களை துணை முதல்வர், தலைமை ஆசிரியர் நிலை-1 பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துணை இயக்குனர் (நிர்வாகம்) வெர்பினோ ஜெயராஜ் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
துணை முதல்வர், தலைமை ஆசிரியர் நிலை-1 பதவியில் 6 ஆண்டுகளாக இருப்பவர்கள் பட்டியலை அவர்களது பணி விவரங்கள், ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளானால் அதுகுறித்த விவரங்கள், சான்றிதழ்களுடன் வருகிற 15-ந்தேதிகள் இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment