தண்ணீரே ஆனாலும் அளவுக்கு மிஞ்சினால்...?
அதிக அளவில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல் உறுப்புகளும், உடலின் அனைத்து திசுக்களும் நன்கு செயல்பட தண்ணீர் தேவை. ஆனால், தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உடலில் நரம்புகள், தசைகள் மற்றும் இதயத்திற்கு சேதத்தை ஏற்படுத்துமாம்.
பொதுவாக, அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது மூளை செல்கள் வீக்கம் அடையும் அபாயம் உள்ளது. நீண்ட கால இடைவெளியில் திடீரென அதிகப்படியான தண்ணீரை ஒரே நேரத்தில் குடிக்கும்போது உடல் உபாதைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். .இந்த நிலையில், மூளை செல்களுக்கு அதிக நீர் சென்று சேரும்போது மூளை செல்கள் வீக்கமடைகின்றன.
மூளையில் உள்ள செல்களில் அதிகப்படியான தண்ணீரின் அழுத்தத்தால் வீக்கம் ஏற்படும்போது அவை மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, குழப்பம், தூக்க கலக்கம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இந்த அழுத்தம் அதிகரித்தால் அது உயர் ரத்த அழுத்தம், பிராடிகார்டியா என்ற குறைந்த இதயத் துடிப்பு போன்ற நிலைமைகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறுகிறார்கள்.
உடலில் சோடியம் என்ற உப்பு, உடலின் செல்களில் உள்ள திரவத்தின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. உடலில் அதிக அளவு தண்ணீர் சேரும் போது சோடியம் அளவின் சமநிலை குறைந்துபோகும்.
இதனால், உடலில் இருக்கும் செல்கள் வீங்கி, வலிப்பு மற்றும் கோமா நிலையை கூட ஏற்படுத்தலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தாகம் எடுத்தால் தண்ணீர் போதிய அளவு அருந்துவதே நல்லது. அமிர்தமே என்றாலும் அளவுக்கு மீறினால் நஞ்சாகும். அது தண்ணீருக்கும் பொருந்தும்.
No comments:
Post a Comment