தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் அனைவரும் இனி வரும் நாட்களில் விடுப்பு சார்ந்த விவரங்களை ''களஞ்சியம்'' என்ற புதிய செயலி வாயிலாக உள்ளீடு செய்து உரிய அலுவலருக்கு அனுப்ப கரூவூலக கணக்கு ஆணையரால் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
அதன்படி, பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அலுவலகங்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணியாற்றி வரும் அனைத்து வகை ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் செப்டம்பர் 1-ந்தேதி முதல் விடுப்பு எடுக்கும் பட்சத்தில் இந்த செயலி வாயிலாக மட்டுமே அனுமதி பெற முடியும்.
இந்த செயலியில் சம்பந்தப்பட்ட பள்ளி, விடுப்புக்கு விண்ணப்பிப்பவர், அதனை பரிசீலனை செய்பவர், ஒப்புதல் வழங்கும் அதிகாரி என நிர்ணயம் செய்து அதற்காக குழுவை உருவாக்கி விடுப்புகளுக்கான அனுமதியை பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டில் இதுவரை விடுப்பு எடுத்தவர்களின் விவரங்களையும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment