கலைத் திருவிழா - குறுவளமைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்
Read this also:
குறுவள் அளவிலான அமைப்புக் குழு உறுப்பினர்கள் : (ஐவர் குழு)
ஒவ்வொரு குறுவளமையத்திற்கும் கலைத்திருவிழாவினை நடத்துவதற்கு
கீழே குறிப்பிட்டவாறு அமைப்புக் குழுவினை அமைத்தல் வேண்டும். அதாவது 1
& 2 வகுப்பு பிரிவினருக்கு, அரசுப் பள்ளிகளுக்கு ஒரு அமைப்புக்
குழுவினையும். அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு ஒரு அமைப்புக்
குழுவினையும் அதேபோன்று 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பிரிவினருக்கும்.
அரசுப் பள்ளிகளுக்கு ஒரு அமைப்புக் குழுவினையும், அரசு உதவிப் பெறும்
பள்ளிகளுக்கு ஒரு அமைப்புக் குழுவினையும் தனித்தனியே அமைத்தல்
வேண்டும்.
🍓போட்டி நடைபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் முதன்மை
அமைப்பாளராக செயல்படுவார்.
🍓உதவி அமைப்பாளராக மேலும் ஒரு தலைமை ஆசிரியர் செயல்படுவார்.
🍓அப்பகுதிக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி – 1 நபர்
🍓பெற்றோர் ஆசிரியர் கழகப் பிரதிநிதி - 1 நபர்
🍓பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்/உறுப்பினர் - 1 நபர்
இவ்வமைப்புக் குழுவானது. குறுவள அளவில் நடைபெறும் [போட்டிக்கான
இடத்தினை தேர்வு செய்தல், போட்டிக்கான நடுவர் குழுவினை தேர்வு செய்தல்.
நடுவர்களின் மதிப்பெண் தாள்கள் முறையாகப் பராமரிக்கப்படுதல், போட்டியின்
இறுதியில் வெற்றியாளர்களை முறையாக அறிவித்தல் போன்ற அனைத்து
செயல்பாடுகளுக்கும் பொறுப்பு வகித்தல் வேண்டும்.
No comments:
Post a Comment