பி.எட். சேர்க்கை: இணைய வழி
விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழகத்தில்
அரசு, அரசு உதவி பெறும் கல்வியி தொடங்கியது. இதில் சேர்க்கை
யல்கல்லூரிகளில் மாணவர்சேர்க்
கைக்கானவிண்ணப்பப் பதிவு திங்
கள்கிழமை முதல் இணைய வழி
யில் தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள கல்வியியல்
கல்லூரிகளில், இளநிலை கல்வி
யியல் பட்டப்படிப்பான பி.எட்.
படிப்பில் தமிழ், ஆங்கிலம், கணி
தம், இயற்பியல், வேதியியல், தாவ
ரவியல், விலங்கியல், உயிரியல், வர
லாறு, புவியியல், கணினி அறிவி
யல், மனை அறிவியல், பொருளா
தாரம்,வணிகவியல் என 13 பாடங்
கள் கற்பிக்கப்படுகின்றன.
இந்நிலையில், நிகழ் கல்வியாண்
டில் பி.எட். படிப்பில், தமிழகத்
தில் 7 அரசு கல்லூரிகளில் உள்ள
900 இடங்கள், 14 அரசு உதவி
பெறும் கல்லூரிகளில் உள்ள
1,140 இடங்கள் என மொத்தம்
2,040 இடங்கள் கலந்தாய்வு மூலம்
நிரப்பப்படவுள்ளன.
இதற்கான விண்ணப்பப் பதிவு
இணைய வழியில் திங்கட்கிழமை முதல் தொடங்கியது. (www.tngasa.in) இதில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள்
செப்.26 வரை சேர்க்கைக்கான
விண்ணப்பங்களைப் பதிவு செய்
யலாம். விண்ணப்பப் பதிவு கட்ட
ணமாக ரூ.500 செலுத்த வேண்
டும். எஸ்சி, எஸ்டி பிரிவு விண்
ணப்பதாரர்களுக்கு விண்ணப்
பக் கட்டணம் ரூ.250. மாணவர்
கள் விண்ணப்பிக்கும் போது, தங்
களது விருப்ப வரிசைப்படி கல்
லூரிகளைத் தேர்வு செய்ய வேண்
டும். எந்தெந்த கல்லூரிகளில்
என்னென்ன பாடப்பிரிவுகள்,
சேர்க்கை எண்ணிக்கை போன்ற
கூடுதல் விவரங்களை மேற்கண்ட
இணையதள முகவரியில் பார்த்து
தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இது குறித்த சந்
தேகங்கள் ஏதேனும் இருப்
பின், 044-24343106, 24342911
ஆகிய தொலைபேசி எண்களில்
தொடர்பு கொள்ளலாம் என கல்
லூரிக் கல்வி இயக்குநரகம் தெரி
வித்துள்ளது.
No comments:
Post a Comment