தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள்: நாளை வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, September 17, 2024

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள்: நாளை வெளியீடு

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள்: நாளை வெளியீடு 

தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளன. இந்தத் தேர்வெழுதிய முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற ஆசிரி யர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும், தனித் தேர்வர்கள் தங்கள் விண் ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தெரிந்து கொள்ள லாம். 

தொடர்ந்து, மறுகூட்டல் மற்றும் ஒளிநகல் பெற விரும்பும் மாண வர்கள் (www.dge.tn.gov.in) எனும் இணையதளத்தில் விண்ணப் பப் படிவத்தை செப்.20 முதல் 23-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விடைத்தாள் ஒளிநகல் வேண்டி விண்ணப்பிப்பவர் கள் பாடம் ஒன்றுக்கு ரூ.275, விடைத்தாள் மறுகூட்டலுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண் டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment