HCL வேலைவாய்ப்பு..
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதிர்ஷ்டம் இருப்பின் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரையில் உள்ள நிறுவனத்தில் கூட பணியாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று எச்சிஎல். இந்த நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல்வேறு இடங்களிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை மதுரை உள்ளிட்ட இடங்களில் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதுதவிர வெளிமாநிலங்கள்என எடுத்து கொண்டால் பெங்களூர், உப்பள்ளி, குர்கிராம், ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா,லக்னோ, மும்பை, நாக்பூர், புனே, விஜயவாடா உள்ளிட்ட இடங்களிலும் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் நாடு முழுவதும் எச்சிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள கிராசூவேட் இன்ஜினியர் டிரெய்னி (Graduate Engineer Trainee) பணியிடங்கள் நிரப்பபட உள்ளது.
இந்த பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜியரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கு அனுபவம் எதுவும் தேவையில்லை. 2024ம் ஆண்டில் மேற்கூறிய படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும்ஒரு கண்டிஷன் உள்ளது. அதாவது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் விண்ணப்பத்தார்கள் முடித்திருக்க வேண்டும். கண்டிப்பாக அரியர்ஸ் என்பது இருக்க கூடாது. அதேபோல் CAD சர்ட்டிபிகேட் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் நியமனம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலியிடம் மற்றும் அதிர்ஷ்டம் இருப்பின் சென்னை, கோவை, மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்திலும் வேலையை பெற வாய்ப்புள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை.
கடைசிக்கட்ட இண்டர்வியூவின்போது சம்பள விபரம் என்பது தெரிவிக்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப பதிவு முடிவுக்கு வரலாம். இதனால் முடிந்த வரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய
No comments:
Post a Comment