‘புட் சயின்ஸ்’ படிப்பில் என்ன ஸ்பெஷல்..? | What is special about the study of 'Food Science'..? - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 21, 2024

‘புட் சயின்ஸ்’ படிப்பில் என்ன ஸ்பெஷல்..? | What is special about the study of 'Food Science'..?

‘புட் சயின்ஸ்’ படிப்பில் என்ன ஸ்பெஷல்..? | What is special about the study of 'Food Science'..? உயிரியல், வேதியியல், இயற்பியல், பொறியியல் மற்றும் ஊட்டச்சத்து ஆகிய பல துறைகளை ஒருங்கிணைத்து, உணவின் தன்மை மற்றும் உணவுப் பதப்படுத்தும் முறையை ‘உணவு அறிவியல்' ஆராய்கிறது. இதை புட் சயின்ஸ் என குறிப்பிடுகிறார்கள். 


அவசியம் 

மக்கள்தொகை உயர்வு, அதிகரிக்கும் வருமானம், செலவழிக்கும் ஆற்றல், நகரமயமாக்கல், பதப்படுத்தப்பட்ட மற்றும் புதுமையான உணவுகள் மீதான ஆர்வம் காரணமாக, சர்வதேச அளவில் உணவு சந்தை வளர்ச்சியை பெற்றுவருகிறது. இதுமேலும் தொடர்ந்து விரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உணவு சந்தை 2021-ம் ஆண்டில் தோராயமாக 7.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது. வரும் 2027-ம் ஆண்டில் சுமார் 10.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்றும், சுமார் 4-6 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் வளரும் என்றும் சி.ஏ.ஜி.ஆர்., கணித்துள்ளது. 
கல்வி நிறுவனங்கள் 

ஐ.ஐ.டி., என்.ஐ.டி., என்.ஐ.எப்.டி.இ.எம். மற்றும் நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உணவு அறிவியல் சார்ந்த படிப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில், பல்வேறு தனியார் கல்லூரிகளும் இத்துறையில், பி.எஸ்சி., புட் சயின்ஸ் அண்டு புராசசிங் மேனேஜ்மெண்ட் எனும் படிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 
வேலைவாய்ப்புகள் 

ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், உணவு தொழில்நுட்பவியலாளர், உணவு தயாரிப்பு மேலாளர், உணவு விஞ்ஞானி, உணவுத் தரவு ஆய்வாளர், தயாரிப்பு மேம்பாட்டு நிபுணர், தர உத்தரவாத மேலாளர், உணவு பாதுகாப்பு நிபுணர், நுண்ணுயிரியலாளர், பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. 
 உணவு உற்பத்தி நிறுவனங்கள், மருத்துவ நிறுவனங்கள், வேளாண் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பால் பண்ணைகள், கோழி பண்ணைகள், பேக்கரிகள், உணவகங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்கள், தானியங்கள் மற்றும் மசாலா நிறுவனங்கள், ஆலைகள், கேட்டரிங் நிறுவனங்கள், தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள், பேக்கேஜிங் தொழில்கள், உணவு ஆராய்ச்சி ஆய்வகங்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற பல்வேறு களங்களில் வாய்ப்புகள் உள்ளன. 
மேலும், இப்படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு, ஏராளமான சுயதொழில் வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன. பாதுகாப்பான, சத்தான மற்றும் புதுமையான உணவுப் பொருட்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாய்ப்புகளை ‘புட் சயின்ஸ்' படித்தவர்களால் பெற முடிகிறது. சரியான கல்வி மற்றும் திறன்களுடன் உணவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நீங்களும் முக்கிய பங்கு வகிக்கலாம்.
‘புட் சயின்ஸ்’ படிப்பில் என்ன ஸ்பெஷல்..? | What is special about the study of 'Food Science'..?

No comments:

Post a Comment