கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, October 5, 2024

கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை

கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் கூறினார். 
பேட்டி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்த அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறாரோ அதை மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் ரெயில் தண்டவாளங்களை போல் செயல்பட்டு மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அரசின் திட்டங்களை ஆய்வு செய்து அரசுக்கு மேலும் நற்பெயரை பெற்றுத் தருவோம். 
 வேளாண் இடு பொருட்கள் வயதானவர்கள் மனுக்களுடன் நின்றாலே காரை நிறுத்தி அந்த மனுக்களை பெறக்கூடிய முதல்-அமைச்சரை பெற்று இருக்கிறோம். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் முகவரி என்ற திட்டத்தை உருவாக்கி இருக்கிறார். அதற்கு அதிகாரிகளை நியமித்து அந்தந்த துறைகளுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதால் மக்கள் மனுக்களை அதிகம் அளிக்கிறார்கள். குறுவை தொகுப்பு, விவசாய உபகரணங்கள் என எந்த வேளாண் இடுபொருட்கள் என்றாலும் வேளாண்மைத்துறை அமைச்சர் நிரம்ப தந்து கொண்டு இருக்கிறார். இன்னும் கூடுதலாக வேளாண் இடுபொருட்களை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அடுத்த அறிவிப்பு வரும்போது இப்போது வழங்கப்படுவதை விட 10 சதவீதம் கூடுதலாக வேளாண் இடுபொருட்களை பெற்றுத்தருவேன். 
விரிவுரையாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் பேராசிரியர்கள் பற்றாக்குறை உண்டு என்பதை புரிந்த காரணத்தினால் தான் கவுரவ விரிவுரையாளர் என்ற பொறுப்பை முதல்-அமைச்சர் உருவாக்கி எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் கவுரவ விரிவுரையாளரை நியமித்தார். அதன்பிறகும் பற்றாக்குறை இருக்கும் நிலையில் காலியாக இருக்கும் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பிக்க இருக்கிறார். இது விரைவில் நடக்கும். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமிப்பதில் ஏற்பட்டுள்ள இடர்பாடு என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். துணைவேந்தர் நியமனத்தில் முதல்-அமைச்சர் தக்க கவனம் செலுத்துகிறார். சுயமரியாதை இழக்காமல் ஒரு மாநில தன்மையை கட்டி காப்பதில் என்றைக்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்பதை முதல்-அமைச்சர் மீண்டும், மீண்டும் உறுதி செய்வார். மற்ற துறைகளை விட கல்வித்துறைக்கு கூடுதல் நிதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment