ஒரு மாணவனின் ஒட்டு மொத்த ஆளுமை வளர்ச்சிக்கு அம்மாணவனின்
வகுப்பறை கற்றல் அனுபவங்களும், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும்
கல்வி சாரா செயல்பாடுகளில் அம்மாணவர்களின் சிறப்பான பங்களிப்பும்
காரணமாக அமைகின்றது. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
அவர்கள் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆளுமைத் திறன் மேம்பாட்டுச்
செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு சட்ட பேரவையில் பின்வரும் அறிவிப்பினை
வெளியிட்டுள்ளார்கள்.
ஆளுமைத் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள்
"அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தலைமைப் பண்பை
வளர்க்கும் வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும்
பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து, மாணவத் தலைவர் மற்றும் மாணவ
அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவர். இதன் மூலம் மாணவர்களிடையே அரசியல்
அறிவுசார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பட, மாதிரி
சட்டமன்றம் மற்றும் மாதிரி பாராளுமன்றம் நடத்தப்படும். இதற்காக,
தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
இத்திட்டம் ரூபாய்.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்".
மேற்கண்ட அறிவிப்பின்படி, 2024 -25 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள
அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் குழு (House System) அமைப்பினை
"மகிழ் முற்றம்" என்ற பெயரில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள்
இல்லாத பரஸ்பர ஆதரவு ஆகியவைகள்தான் மாணவர் குழு (HouseSystem)
அமைப்பின் முதன்மை நோக்கமாகும்.
விளையாட்டு நடவடிக்கைகளுக்கு
அப்பால், சமூக உணர்வை ஊக்குவிப்பதற்கும், குழுப் பணியை வளர்ப்பதற்கும்,
பல்வேறு கல்வி மற்றும் கல்விச்சாரா இணைச் செயல்பாடுகள் மூலம் மாணவர்
தலைமையை ஊக்குவிப்பதற்கும் ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்,
இந்த அமைப்பு மாணவர்களின் தலைமைத்துவம். பங்கேற்பு மற்றும்
ஆரோக்கியமான போட்டிகளுடன் மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியையும்,
குழு செயல்பாடுகளில் ஈடுபடவும் ஊக்குவித்து மகிழ்ச்சியான பள்ளிச் சூழலை
உருவாக்குகிறது.
மாணவர் குழு அமைப்பின் நோக்கங்கள்
💧கற்றல் திறன் மேம்பாடு
💧மாணவர்களின் ஊக்கம் மற்றும் பங்களிப்பை அதிகரித்தல்
💧மாணவர்கள் விடுப்பு எடுப்பதை குறைத்தல்
💧ஒற்றுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவித்தல்
💧அனைத்து மாணவர்களுக்குமான வாய்ப்புகள்
💧நேர்மறை நடத்தைகளை வலுவூட்டுதல்
💧தலைமைத்துவ பண்பை வளர்த்தல்
💧ஆசிரியர் மாணவர் உறவை மேம்படுத்துதல்
No comments:
Post a Comment